இடுகைகள்

கொடுமையே தூது சொல்

கொடுமையே தூது சொல்  கையில் உன் நகத்தின் கூர்மையால் நான்கு கீறல்  முகத்தில் பதிந்த அரக்க கை, மண்ணெண்ணெய்யில் எறிந்த முதுகு  இவை என் ஆபரணங்கள்  மறைக்க முயன்றதில்லை பெருமை சுடர்கள் அவை. யார்யாரோ சாலையில் அவைகளை பார்த்து பரிதவித்தார்கள் முகப்புத்தகத்தில் அழும் பொம்மை போட்டார்கள்  சிரித்தேன்! உள்ளங்குளிர்ந்தது! ஓர் அரக்கன் உடலென்னும் என் "கோவிலில்" நிரந்தரமாக பதிந்தான் இவ்வுடல் கழியும் வரை இவை தூது சொல்லும். வெறும் வார்த்தையை நம்ப யார் இங்கே  மன வடுக்களை காண யார் இங்கே  சீரமைக்க மாட்டேன் இந்த உதிர வடுக்களை  அவையும் அவையால் எழும்பும் கழிச்சொல்லும் கோடி முறை கொல்லட்டும்  உன்னை  அவர் அழும் துளிகளில் கொப்பளித்துப் பொசுங்கு                                                                                ...

உரிமை

மழலை ஒலியாம். என் மூன்று வயது அழுகை இருபது இரண்டிலும்  வருகிறது, முடியவில்லை என்னிடம் இருந்து அழும் உரிமையை பறித்து விட்டார்கள் வலித்தாலும் இல்லை, பிரிந்தாலும் இல்லை, இழந்தாலும் இல்லை பேருந்தில், ஒரு வயது பிஞ்சின் மீது ஒரு அசட்டுத்தனமான பொறாமை அதனின் அறியாமையோ,  உரிமையோ,  இன்பமாய் அழும் விசித்திரமோ காரணம் தெரியவில்லை                                                                                                                                                                                  - ஷ்ரவன்     ...

ரூம் நம்பர் 556

 "யோவ்! கார் கதவ சீக்கிரம் மூடுயா! யாராச்சு பாத்துர போறாங்க" என சடசடவென காரை விட்டு இறங்கினர் GKS உம் அவர் டிரைவர் பாண்டியும். மாலை ஏழு மணிக்கு ஆஃபிஸில் இருந்து புறப்பட்டு தேனாம்பேட்டயில் வண்டி ஒரு மணி நேரம் நிக்க எப்படியோ ஒன்பதரை மணிக்கு சைதாப்பேட்டை பிரிட்ஜ்க்கு அந்த சைடு உள்ள அந்த குறுக்கு சந்தை வந்தடைந்தது. இவரின் கருப்பு ஆடியின் கண்ணை துளைக்கும் விளக்கை தவிர தெருவில் வேறு விளக்கு இல்லை. அவர்கள் எதிரில் நின்ற லாட்ஜில் மட்டும் மூன்று நான்கு அறைகளில் மஞ்சள் தெரிந்தது. "நீ இங்கயே வெயிட் பண்ணுயா. போலீஸ் கீலிஸ் வந்தா கால் போட்டு சொல்லு. முடிச்சிட்டு வந்துடறேன்" . "சரி சார்". ..... "சார்! நீங்க வேட்டைப்புலி டைரக்டர் தானே? சார் நீங்க போய் இங்க?" என்றான் வரவேற்பாளன். "மேனேஜர் எங்கய்யா? போய் வர சொல்லு" "ஹலோ Mr. GKS. சொல்லுங்க சார். என்ன இந்த பக்கம்? Mrs. GKS , உங்களுக்கு  வயசாயிருச்சுனு ரூம் அ உட்டு தொரத்திட்டாங்களா ?" என்றான் மேனேஜர் ஆறுமுகம். "எனக்கு ரூபிணி வேணும் " "அட என்ன சார். யாரோ உங்களுக்கு சொ...

தனிப்பெருந்துணையே

படம்
ராம் , அவள் அணிந்திருந்த  காய்ந்த துணிகளை மடித்து தனது வாழ்நாள் பொக்கிஷங்களோடு சேர்த்து வைக்க , கறுப்பு திரையில் "இயக்கியவர் - பிரேம் குமார்" என காட்சி அளிக்கும் போது உணர்கிறது , நாம் பார்த்து கொண்டிருப்பது படம் என்று மனதில் மிகுந்த கனத்துடன் திரை அரங்கை விட்டு வெளியே வந்த பல பேரில் ஒருவராய் நான். ராம் , ஜானு என்ற எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரின் வாழ்வில் ஒரு நாள் பங்கெடுத்து கொண்டதை போல் ஒரு உணர்வு  .எதோ இரண்டு பேர் அவர்களது வாழ்வில் நடந்த கதையை நம்மிடம் மனம் திறந்து கூறிய ஒரு நிறைவு. அவர்கள் சிரிப்பில் நாம் சிரிக்க ,அவர்கள் பிரிவில் நாம் வாடா ,உணர்ச்சிகளின் எழும்பல் பரவசம் ஊட்டி ஏதோ செய்தது. என்னை என்னடா செய்தீர்கள்? ஒரு திரைப்படத்தை பார்த்து எனக்குள் ஏன் இவ்வளவு பாதிப்பு என புலம்ப வைத்தது 96. பார்த்து விட்டு வந்த உடன் காய்ந்த மண்ணை யாசித்த மழையைப் போல் உணர்ச்சிகளின் தூறல் இதோ வழி போக்கிக் கொண்டு நிஜங்களின் நிழலை கேமராவில் பிடித்து கொண்டு , இரண்டு மாதம் வெட்டாத ரோமத்துடன் ராம். போகும் வழியில் தான் படித்த பள்ளியில் வாழ்ந்த முன் கால நிஜத்தை தேடுகிறான்...

அடேய் மனிதா !!

எனக்குள் பல நாட்களாக ஓர் விவாதம். "உணர்வு ஓர் மனிதனுக்கு வரமா சாபமா?" என்று. எத்தனையோ கொள்கைகள் நம் இனத்தை எத்தனையோ சம நிலைக்கு எடுத்து சென்றமையை மறுக்க எண்ணமில்லை. ஆனாலும் வெவ்வேறு உணர்ச்சிககளின் முரண்கள் எவ்வித சம நிலைக்கு வித்தாகும் என ஒரு வியப்பு. கடல் தாண்டி மலை தாண்டி பறந்து விரிந்திருக்கும் நாம் எலாம் எந்த ஒரு உணர்வுக்குள் அடங்குவோம் என பல எண்ணங்களின் வெடித்தல் இதோ ... முதலில் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உன்னதமான உண்மை -உணர்வையும் மனிதனையும் நீக்க முடியாது. கொள்கை அற்ற மனிதன் பிணத்திற்கு சமம். உணர்ச்சிகள் இல்லா ஜடமாய் திரிவான். சான்றிற்கு கம்யூனிசம் தான் இயல்பாக உன் மனதில் உதித்த உணர்ச்சி என்றால் அதை விரும்பு. அந்த சிந்தையுடன் முழுமையாக நட்புறவு கொள். உன் உணர்ச்சிகளே உன் அடையாளம். அவை தான் நீ. அதை பெருமையாக நினைக்காவிட்டால் வேறொரு உணர்ச்சி கொள். ஆனால் அடுத்த அலை வந்தால் அடித்து கொண்டு போகாமல் நங்கூரம் போடு. சுபாஷ் சந்திரா போஸ்ஸின் போர் வழியை குறை கூறி பல காந்தியவாதிகள் கொடி பிடித்தனர். அவர் அன்று மனம் மாறி இருந்தால் அவர் மற்றொரு காந்தியவாதி என்ற நிழலில்...

"அயி கிரி நந்தினி !"

            (அழகாக சிண்டு போட்டுக்கிட்டு நெத்தில சாந்து  பொட்டோடு ,நந்தினி தனது ஐந்தாம் வயதில் !)                                                                  "அம்மா ! எதுக்கு மா ரெண்டு பேரு இருக்காங்க ? "  "என்ன ரெண்டு பேரு ?" "இல்லமா boy உம் இருக்காங்க girl உம் இருக்காங்க ல ?ஏன் ?" " சாமி  ரெண்டு பேரும் ஒத்து வாழ தான் செல்லம் create பன்னிருக்காரு ." "ரெண்டு பெரும் ஒன்னு டா .நீயும் உன் தம்பி உம்  ஒன்னு " "சரி மா" (ஐந்தாம் வகுப்பில் நந்தினி .அதே பாவாடை சட்டை .அதே இரட்டை பின்னல் .ஐந்தடி வளந்துவிட்டாள். சற்று பருமன் )                                                        "பெண்ணாக பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்...

That smile

படம்
                                          "Oh!! The humans .How tragic? How such toxic beings of the world rule it? Never have I seen someone so self-centered .How divergent ? How dynamic ? One day they kiss me right into my cheeks .The other day I get squeezed in the event of their stress .How fiendish? Waging wars against their own fellow mates.Faking smiles and tears through thick and thin. never have I seen a more wicked race. Through summers and winters and autumns and centuries they've gotten worse. Through religions and gods and demons and saints , they haven't found the ultimate truth yet.Oh ! Pity them. Idolizing anything with eyes ,nose and form .I've got eyes , a curve and a form .Idolize me ,you forsaken human race .Let my smile behold the pique of the human race you have ever worshiped. Idolize . Surrender .Dissolve in the idea of me ,or I'll take the life of the first ...