அடேய் மனிதா !!
எனக்குள் பல நாட்களாக ஓர் விவாதம். "உணர்வு ஓர் மனிதனுக்கு வரமா சாபமா?" என்று. எத்தனையோ கொள்கைகள் நம் இனத்தை எத்தனையோ சம நிலைக்கு எடுத்து சென்றமையை மறுக்க எண்ணமில்லை. ஆனாலும் வெவ்வேறு உணர்ச்சிககளின் முரண்கள் எவ்வித சம நிலைக்கு வித்தாகும் என ஒரு வியப்பு. கடல் தாண்டி மலை தாண்டி பறந்து விரிந்திருக்கும் நாம் எலாம் எந்த ஒரு உணர்வுக்குள் அடங்குவோம் என பல எண்ணங்களின் வெடித்தல் இதோ ...
முதலில் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உன்னதமான உண்மை -உணர்வையும் மனிதனையும் நீக்க முடியாது. கொள்கை அற்ற மனிதன் பிணத்திற்கு சமம். உணர்ச்சிகள் இல்லா ஜடமாய் திரிவான். சான்றிற்கு கம்யூனிசம் தான் இயல்பாக உன் மனதில் உதித்த உணர்ச்சி என்றால் அதை விரும்பு. அந்த சிந்தையுடன் முழுமையாக நட்புறவு கொள். உன் உணர்ச்சிகளே உன் அடையாளம். அவை தான் நீ. அதை பெருமையாக நினைக்காவிட்டால் வேறொரு உணர்ச்சி கொள். ஆனால் அடுத்த அலை வந்தால் அடித்து கொண்டு போகாமல் நங்கூரம் போடு. சுபாஷ் சந்திரா போஸ்ஸின் போர் வழியை குறை கூறி பல காந்தியவாதிகள் கொடி பிடித்தனர். அவர் அன்று மனம் மாறி இருந்தால் அவர் மற்றொரு காந்தியவாதி என்ற நிழலில் மறைக்க பட்டிருப்பார். நற் சிந்தையில் இருந்து பிறப்பது உணர்வு. வலுவான உணர்விலிருந்து பிறப்பதே செயல் .
நான் கூறுவது அனைத்தும் எனக்கும் சாரும் எனவும் ,சொல்வதெல்லாம் என் மனசாட்சிக்கும் பாடமே என்பதை மரு முறை நினைவு கூறுகிறேன். போலித்தனம் நீக்கப்படா விட்டால் இனி ஒரு பாரதி பிறக்க போவதில்லை. உன் செவியால் அனைத்தையும் கேளு. உனது தர்மத்தை நீ முடிவு செய். உனக்கு பிடித்தால் ராமனையும் அல்லாவயும் போற்று. உன் மீது நம்பிக்கை இருந்தால் பயங்கர வாதத்தை கூட ஆதரி. மக்களை கொல்லு .ஆனால் உன் செயலிற்கு நீ பொறுப்பாகு. நிலையான நன்மை தீமை என இவ்வுலகில் எதுவுமில்லை. தனி மனித நன்மை தீமைகளுக்கு நீ பொறுப்பானால் எதையும் செய். நீ கொண்ட உணர்விற்கு உனக்கு நேரும் கர்மாவை எதிர்கொள். நீ பெண்ணாக இருந்தால் ஆண் வர்க்கத்தின் திணித்தலை எதிர்த்து போராடு, நாத்திகனாக இருந்தால் ஆன்மீகத்தின் பிடியிலிருந்து விடுதலை கொள். தனி மனித உணர்ச்சி கொள் தோழா.
உணர்ச்சி கொள் என பேச முயன்றமையில் கூற வந்ததை மறந்தேன். மன்னித்துவிடுங்கள். எப்போதுமே இதையெலாம் இவ்வளவு அழுத்தமாக கூறாமல் இறந்து போனால் நான் கொண்ட உணர்வு தவறிவிடும். சொல்ல வந்த கதை ? அதை கூறுவதற்கு முன் உங்கள் அனைவர்க்கும் சில கேள்விகள். நீங்கள் உங்கள் சாதியை நினைத்து பெருமை கொள்பவரா? கொள்பவர் என்றால் அப்படியே இருங்கள். அடுத்த கேள்வி சாதி என்ற வார்த்தையை பார்த்த மரு நொடி கொதித்து எழுந்த வர்க்கத்திற்கு. அப்படி நீங்கள் சாதி மத உணர்ச்சிகளை துறந்தவரே ஆனால் வாழ்த்துக்கள். அதற்கு காரணம் அது உண்டாக்கும் பேதங்கள் என நினைப்பதற்கு. ஆனால் உங்களுக்கு உங்கள் மொழி பிடிக்குமல்லவா? நீங்கள் வாழும் தேசத்தை போற்றுவீர்கள் அல்லவா? "நாமெல்லாம் ஹிந்து முஸ்லீம் கிறித்துவர்கள் அல்ல இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம். ஜெய் ஹிந்த்" என முக நூலில் ஆகஸ்ட் 15 ஆம் நாள் அன்று மட்டும் பதிவு செய்துவிட்டு பெருமையாக உறங்கியவரே. உங்களைத் தான். அப்பதிவை எங்கோ தாழ்ந்த ஒரு நாட்டில் ஒரு சிறுவன் பார்த்து வருந்த மாட்டான் என அவ்வளவு நம்பிக்கையா? இல்லை என் மொழியில் இத்தனை வளங்கள் உள்ளதென தாரை தப்பட்டை அடிப்பதனால் வேற்று மொழியான் தாழ்த்த பட மாட்டான் என்ற ஆணவமா?அவன் சாதி வெறியன் என்றால் நீ மொழி வெறியன். உன் உணர்ச்சி சரியென்றால் அவன் வெறி ,வெறி அல்ல. அதையும் கொள்கையாகவே பார்ப்பாய். அது தான் உண்மையான பகுத்தறிவு. கோயிலுக்குள் தாழ்த்த பட்டவனை விடாத பார்ப்பனனும் அது அல்ல, அதற்கு எதிர் வினையாக
பூநூலை அறுத்து உணர்ச்சி கொலை செய்த பெரியாரும் அது அல்ல. மற்றவர் கொண்ட உணர்வை மதித்து அதை குறை கூறாமல் அதனின் நன்மை தீமையை தக்க வழியில் எடுத்துரைப்பதே விவாதத்தின் கனவு. அதுவே மனிதத்தின் முதல் படி கூட. வாதம் எதிர் வாதம் எல்லாம் மனிதம் உள்ள வரை தான் மதிப்பு. ஆரோக்கியமான விவாதத்தின் மூலதனம் பேதங்கள் மறந்து மனிதன் என்ற நிழலில் சம நிலை கொள்வது. மனிதமே நமக்குள் இருக்கும் எல்லா உணர்விற்கும் மூலம். நீ வாழ்வில் எந்த கொள்கையை கொண்டாலும் அதற்கு அர்த்தம் விளக்குவதும் இந்த மனிதமே. இல்லையேல் வாழும் வாழ்க்கை அர்த்தமற்று போய் விடும். பார்த்துக்கொள்.
- ஷ்ரவன்

நமக்கெல்லாம் 15-20 வயசு வரை நமது பெற்றோர் முடிவெடுத்து ஊட்டுவதே நம் உணர்வாகும். கடவுள் யாரென்று தனி மனித பகுத்தறிவதற்கான பருவம் அது இல்லை. அப்பொழுதே நாம் கோயிலிற்கும் மசூதிக்கும் தேவாலயத்திற்கும் சென்றிருப்போம். நமது பாலிய நாட்களில் திணிக்கப்பட்ட உணர்வுகள் அது. அவை கால போக்கில் முதிர்ச்சி அடையலாம் இல்லை இறந்து போகலாம். நாம் நமக்கும் இவ்வுலகிற்கும் கேட்கும் கேள்விகளின் விடைகளே அதை முடிவு செய்யும். சிலரிடம் ஏன் இறை பக்தி கொண்டுள்ளார் என நான் கேட்ட போது வேடிக்கையான பதில்கள் கிடைத்தது. ஒருவர் அதை பற்றியெல்லாம் யோசித்ததே இல்லயாம். சிறு வயதிலிருந்தே பழகியதால் இப்பொழுதும் பின்பற்றுகிறார்கள். மற்றொவர் பெற்றோருக்கு பயந்து பக்திமான் வேஷம் போடுகிறார். மேற்கூறியவர்கள் தம்மால் பகுத்தறிந்து உலகையும் தன்னையும் புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ள வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. நாமெல்லாம் ஒரு சமுதாயத்தின் வழியை பார்வை நீத்து பின்பற்றுவதற்கு காரணமும் இது தான். சிந்தனை செய்ய விரும்பாமை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏன் கலந்தீர்? என்னையும் சேர்த்து பாதி பேரின் விடை - எல்லாரும் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு உதவியாக ஏன் முக நூல் பதிவு போட்டீர்? போடவில்லை ஏனில் நான் மனிதன் என்ற முகமூடி என் முக நூல் வாசகர்கள் முன் கிழிந்து விடும். எட்டு வழி சாலைக்கும் ஜல்லிக்கட்டிற்கும் காவேரி பிரச்சனைக்கும் எதிராக திரைப்பட நடிகர் விஜய்யோ பிக் பாஸ் பிரபலம் ஓவியாவோ குரல் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அது நடக்காவிட்டால் கொதித்தெழும் பதிவுகளும் இதனால் தான். சமூகத்தின் அளவுகடந்த கொள்கை திணித்தல். வாழ்வு முறை திணித்தல். இப்படி மற்றவன் கொள்கை மற்றவன் சிந்தை மற்றவன் வாழ்க்கையின் கரையில் வாழ்வதற்கு விலங்காக வாழ்ந்துவிடலாமே?
நான் கூறுவது அனைத்தும் எனக்கும் சாரும் எனவும் ,சொல்வதெல்லாம் என் மனசாட்சிக்கும் பாடமே என்பதை மரு முறை நினைவு கூறுகிறேன். போலித்தனம் நீக்கப்படா விட்டால் இனி ஒரு பாரதி பிறக்க போவதில்லை. உன் செவியால் அனைத்தையும் கேளு. உனது தர்மத்தை நீ முடிவு செய். உனக்கு பிடித்தால் ராமனையும் அல்லாவயும் போற்று. உன் மீது நம்பிக்கை இருந்தால் பயங்கர வாதத்தை கூட ஆதரி. மக்களை கொல்லு .ஆனால் உன் செயலிற்கு நீ பொறுப்பாகு. நிலையான நன்மை தீமை என இவ்வுலகில் எதுவுமில்லை. தனி மனித நன்மை தீமைகளுக்கு நீ பொறுப்பானால் எதையும் செய். நீ கொண்ட உணர்விற்கு உனக்கு நேரும் கர்மாவை எதிர்கொள். நீ பெண்ணாக இருந்தால் ஆண் வர்க்கத்தின் திணித்தலை எதிர்த்து போராடு, நாத்திகனாக இருந்தால் ஆன்மீகத்தின் பிடியிலிருந்து விடுதலை கொள். தனி மனித உணர்ச்சி கொள் தோழா.
உணர்ச்சி கொள் என பேச முயன்றமையில் கூற வந்ததை மறந்தேன். மன்னித்துவிடுங்கள். எப்போதுமே இதையெலாம் இவ்வளவு அழுத்தமாக கூறாமல் இறந்து போனால் நான் கொண்ட உணர்வு தவறிவிடும். சொல்ல வந்த கதை ? அதை கூறுவதற்கு முன் உங்கள் அனைவர்க்கும் சில கேள்விகள். நீங்கள் உங்கள் சாதியை நினைத்து பெருமை கொள்பவரா? கொள்பவர் என்றால் அப்படியே இருங்கள். அடுத்த கேள்வி சாதி என்ற வார்த்தையை பார்த்த மரு நொடி கொதித்து எழுந்த வர்க்கத்திற்கு. அப்படி நீங்கள் சாதி மத உணர்ச்சிகளை துறந்தவரே ஆனால் வாழ்த்துக்கள். அதற்கு காரணம் அது உண்டாக்கும் பேதங்கள் என நினைப்பதற்கு. ஆனால் உங்களுக்கு உங்கள் மொழி பிடிக்குமல்லவா? நீங்கள் வாழும் தேசத்தை போற்றுவீர்கள் அல்லவா? "நாமெல்லாம் ஹிந்து முஸ்லீம் கிறித்துவர்கள் அல்ல இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம். ஜெய் ஹிந்த்" என முக நூலில் ஆகஸ்ட் 15 ஆம் நாள் அன்று மட்டும் பதிவு செய்துவிட்டு பெருமையாக உறங்கியவரே. உங்களைத் தான். அப்பதிவை எங்கோ தாழ்ந்த ஒரு நாட்டில் ஒரு சிறுவன் பார்த்து வருந்த மாட்டான் என அவ்வளவு நம்பிக்கையா? இல்லை என் மொழியில் இத்தனை வளங்கள் உள்ளதென தாரை தப்பட்டை அடிப்பதனால் வேற்று மொழியான் தாழ்த்த பட மாட்டான் என்ற ஆணவமா?அவன் சாதி வெறியன் என்றால் நீ மொழி வெறியன். உன் உணர்ச்சி சரியென்றால் அவன் வெறி ,வெறி அல்ல. அதையும் கொள்கையாகவே பார்ப்பாய். அது தான் உண்மையான பகுத்தறிவு. கோயிலுக்குள் தாழ்த்த பட்டவனை விடாத பார்ப்பனனும் அது அல்ல, அதற்கு எதிர் வினையாக
பூநூலை அறுத்து உணர்ச்சி கொலை செய்த பெரியாரும் அது அல்ல. மற்றவர் கொண்ட உணர்வை மதித்து அதை குறை கூறாமல் அதனின் நன்மை தீமையை தக்க வழியில் எடுத்துரைப்பதே விவாதத்தின் கனவு. அதுவே மனிதத்தின் முதல் படி கூட. வாதம் எதிர் வாதம் எல்லாம் மனிதம் உள்ள வரை தான் மதிப்பு. ஆரோக்கியமான விவாதத்தின் மூலதனம் பேதங்கள் மறந்து மனிதன் என்ற நிழலில் சம நிலை கொள்வது. மனிதமே நமக்குள் இருக்கும் எல்லா உணர்விற்கும் மூலம். நீ வாழ்வில் எந்த கொள்கையை கொண்டாலும் அதற்கு அர்த்தம் விளக்குவதும் இந்த மனிதமே. இல்லையேல் வாழும் வாழ்க்கை அர்த்தமற்று போய் விடும். பார்த்துக்கொள்.
- ஷ்ரவன்
கருத்துகள்
கருத்துரையிடுக