உரிமை
மழலை ஒலியாம். என் மூன்று வயது அழுகை
இருபது இரண்டிலும் வருகிறது, முடியவில்லை
என்னிடம் இருந்து அழும் உரிமையை பறித்து விட்டார்கள்
வலித்தாலும் இல்லை, பிரிந்தாலும் இல்லை, இழந்தாலும் இல்லை
பேருந்தில், ஒரு வயது பிஞ்சின் மீது ஒரு அசட்டுத்தனமான பொறாமை
அதனின் அறியாமையோ, உரிமையோ, இன்பமாய் அழும் விசித்திரமோ
காரணம் தெரியவில்லை
- ஷ்ரவன்
25.06.20
- ஷ்ரவன்
25.06.20
அழும் உரிமையை பறித்தது யார்? எப்பாலனாலும் நவரசம் இல்லாவிட்டால் நடை பிணமே
பதிலளிநீக்கு