corona days

    இரண்டாம் வருடமாய் தொடர்ந்து மனிதன் என்னும் விலங்கு எத்தனை துச்சமானவன் என உணர்த்தி கொண்டிருக்கிறது, கண் அறியா கிருமி. கொரோனா என அந்த துச்ச விலங்கு அதனை அழைக்கிறது. quarantineஉம் isolationஉம் நம் ஆங்கில சொல்லகராதியில் சேர்த்த மிகச்சிறிய கொடூரன். சீனாவில் எவனோ வவ்வால் கரி உண்டு வந்ததாம். அது உண்மை என்றால் வவ்வால் தான் சம கால கல்கி போல. 

    போன வருடம் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் கம்மி, சாமானியனின் பயம் மிகவும் அதிகமாக தென்பட்டது. மார்ச் மாதம் துவங்கி இரண்டு மூன்று மாதங்களுக்கு 200 300 கேஸ் என்றாலே அலறி அடித்து வீட்டில் அமர்ந்தோம். சாதி மத பேதமின்றி தாக்கினான் அந்த அசுரன். சிறு தொழிலில் இருந்து அம்பானியம் வரை அனைத்தும் முடங்கியது. அன்றாடம் ஊதியம் வாங்கி பிழைத்த பல கூலி தொழிலார்கள் வியாபாரிகள் என பல தரப்பினர் உணவு இல்லாமல் வாடியதெல்லாம் நாம் அறிவோம். லாக்கடவுன் என நாம் இதற்கு முன் கேள்வியே படாத கட்டுப்பாடு நம் அனைவரையும் வீட்டில் அடைத்தது. என்னை போன்ற வீடு விரும்பிகளுக்கு அது முதலில் பெரிய மாற்றமாக தெரியவில்லை. எப்போதும் போல் என்னால் முடிந்த சோறு போடும் கணினி வேலையையும் பாட்டையும் எழுத்தையும் கட்டி அணைத்து காலத்தை ஓட்டி கொண்டிருந்தேன். ஒரு செப்டம்பர் போல் நான் அக்கா அம்மா என 
அனைவரும் பாதிக்க பட்டோம். அவை கொடுமையான நாட்களாய் திகழ்ந்தன. நான் குரு நானக் பள்ளியிலும், தாய் மருதுவுமனையிலுமாக இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்ப அரை மாத காலமாயிற்று. ஸ்டிக்கர் ஒட்டி, பல முறை வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து சென்றது அன்றைய தின ஆட்சி 

    2021-இல் இயல்பு நிலை திரும்ப தொடங்க, நாம சும்மா இருப்போமா. அசாத்தியமான இயல்பு நிலையில் அப்படியே ஒரு தேர்தல், கும்பமேளா என குஜால்கள் செய்தோம். மெல்ல மெல்ல மே மாதம் அருகே ருத்ர தாண்டவமாய் வந்தடைந்தான் கொரோனா. வெர்சன் 2.0 ஆக. போன வருடம் வேலைக்கேற்ற சொன்ன நமது பிரதமர் மோடிஜி மான் கி பாத் என திடீரென்று மோட்டிவேஷன் கிளாஸ் எடுக்க தொடங்க மிக மோசமான சில நாட்கள் அரமித்தன 

    சிறு வயதில் எனக்கு பாடம் எடுத்தவர். அவரை தொடங்கி எனக்கு அறிந்த பல பேரை காவு வாங்கியது. படுக்கைகள் இல்லாமல்,ஆக்சிஜென் இல்லாமல், தடுப்பூசி இல்லாமல் என பல இல்லாமைகளால், பல உயிர்கள் இல்லாமல் போனது. தாயின் உயிர் ஸ்நேகிதி, ஒரு நண்பனின் தந்தை,     எனது நண்பியின் தாய், விவேக், எஸ் பி பி என எண்ணற்ற உயிர்கள் பிரிந்தன. பள்ளி நண்பன் ஒருவன் தந்தை இறந்த செய்தியை சகஜமாக கூற, என் தந்தையின் இறப்பு நினைவு வந்தது. சகஜம். இறப்பும் இழப்பும் துயரமும் அவல நிலையும் சகஜமாக இருந்தது. ஒரு செய்தியின் பிடியில் சிக்கி சின்னாபின்னம் ஆகி வெளியில் வருவதற்குள் மற்றொன்று என மறக்க வேண்டிய இரு மாதங்கள் அவை.

    நான் வேளைக்கு அலுவலகம் சென்று ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. எனது இருபதுகள் என்னை விட்டு சென்று கொண்டே இருக்கிறது. பல சுவாரசியமான இடங்களையும் மக்களையும் நினைவுகளையும் சுகிக்க வேண்டிய நேரத்தில் வீட்டில் அடைபட்டு அழுது கொண்டும் புலம்பி கொண்டும் இருக்கிறேன். ஆனால் தாயை தந்தையை அண்ணனை அக்காளை வேலையை வீட்டை உரிமையை இழந்து அல்லல் படும் சனத்திற்கு நடுவில் நான் பாக்கியவான். என் வாழ்வு ஆசிர்வதிக்கப்பட்டது. ஒரு வேலையும், நேரத்திற்கு உணவும், தங்குமிடமும் என இருக்கும் அனைவரும் அப்படியே. அக்காலத்தை கடக்க உதவியதும் அந்த எண்ணம் தான். இதிலிருந்து நாம் எடுத்து செல்லும் பாடங்கள் அதிகம். பல வருடம் கழித்து வேறொரு பெருந்தொற்று வந்து அக்கால அப்போதும் வாழ்ந்தால் இந்நிவுகளின் கோர்வை கிளிர்ச்சி ஊட்டும் என நம்புகிறேன். இழந்த அதனை இழப்பிற்கும் அப்போது  ஒரு துளி கண்ணில் சிந்தும் போல. இன்று இப்பொழுது இதை இனிதே கிடப்போம். நடந்ததை மற்ற அனைத்தும் போல கடந்து செல்வோமே ஆக. இன்னல்களை கொடுப்பதும் கெடுப்பதும் அந்த கடவுள் செயல் என்றால், கடப்பதும் மறப்பதுமாகவே நாம் இருப்போம். இதுவும் கடந்து போகும். இருள் படிந்த காட்டில் பரிதவித்த ஆட்டிற்கு எங்கோ ஓர் மூலையில் சிறு விளக்காய், என் மன குழப்பங்களை எல்லாம் எழுத காரண கர்த்தாவாக ஓர் யோகேஷ் சார் ஆய், உங்கள் அனைவருக்கும் சிறு கயிறு கிடைக்கும். பிடித்து கொண்டு அனைவரும் கரை சேருவோமாக. கிணற்றில் வீழ்வதும் பின் கரை சேர்வதும் தானே வாழ்க்கை 

                                                                                                                            - ஷ்ரவன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"அயி கிரி நந்தினி !"

உரிமை

ரூம் நம்பர் 556