இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரூம் நம்பர் 556

 "யோவ்! கார் கதவ சீக்கிரம் மூடுயா! யாராச்சு பாத்துர போறாங்க" என சடசடவென காரை விட்டு இறங்கினர் GKS உம் அவர் டிரைவர் பாண்டியும். மாலை ஏழு மணிக்கு ஆஃபிஸில் இருந்து புறப்பட்டு தேனாம்பேட்டயில் வண்டி ஒரு மணி நேரம் நிக்க எப்படியோ ஒன்பதரை மணிக்கு சைதாப்பேட்டை பிரிட்ஜ்க்கு அந்த சைடு உள்ள அந்த குறுக்கு சந்தை வந்தடைந்தது. இவரின் கருப்பு ஆடியின் கண்ணை துளைக்கும் விளக்கை தவிர தெருவில் வேறு விளக்கு இல்லை. அவர்கள் எதிரில் நின்ற லாட்ஜில் மட்டும் மூன்று நான்கு அறைகளில் மஞ்சள் தெரிந்தது. "நீ இங்கயே வெயிட் பண்ணுயா. போலீஸ் கீலிஸ் வந்தா கால் போட்டு சொல்லு. முடிச்சிட்டு வந்துடறேன்" . "சரி சார்". ..... "சார்! நீங்க வேட்டைப்புலி டைரக்டர் தானே? சார் நீங்க போய் இங்க?" என்றான் வரவேற்பாளன். "மேனேஜர் எங்கய்யா? போய் வர சொல்லு" "ஹலோ Mr. GKS. சொல்லுங்க சார். என்ன இந்த பக்கம்? Mrs. GKS , உங்களுக்கு  வயசாயிருச்சுனு ரூம் அ உட்டு தொரத்திட்டாங்களா ?" என்றான் மேனேஜர் ஆறுமுகம். "எனக்கு ரூபிணி வேணும் " "அட என்ன சார். யாரோ உங்களுக்கு சொ...

தனிப்பெருந்துணையே

படம்
ராம் , அவள் அணிந்திருந்த  காய்ந்த துணிகளை மடித்து தனது வாழ்நாள் பொக்கிஷங்களோடு சேர்த்து வைக்க , கறுப்பு திரையில் "இயக்கியவர் - பிரேம் குமார்" என காட்சி அளிக்கும் போது உணர்கிறது , நாம் பார்த்து கொண்டிருப்பது படம் என்று மனதில் மிகுந்த கனத்துடன் திரை அரங்கை விட்டு வெளியே வந்த பல பேரில் ஒருவராய் நான். ராம் , ஜானு என்ற எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரின் வாழ்வில் ஒரு நாள் பங்கெடுத்து கொண்டதை போல் ஒரு உணர்வு  .எதோ இரண்டு பேர் அவர்களது வாழ்வில் நடந்த கதையை நம்மிடம் மனம் திறந்து கூறிய ஒரு நிறைவு. அவர்கள் சிரிப்பில் நாம் சிரிக்க ,அவர்கள் பிரிவில் நாம் வாடா ,உணர்ச்சிகளின் எழும்பல் பரவசம் ஊட்டி ஏதோ செய்தது. என்னை என்னடா செய்தீர்கள்? ஒரு திரைப்படத்தை பார்த்து எனக்குள் ஏன் இவ்வளவு பாதிப்பு என புலம்ப வைத்தது 96. பார்த்து விட்டு வந்த உடன் காய்ந்த மண்ணை யாசித்த மழையைப் போல் உணர்ச்சிகளின் தூறல் இதோ வழி போக்கிக் கொண்டு நிஜங்களின் நிழலை கேமராவில் பிடித்து கொண்டு , இரண்டு மாதம் வெட்டாத ரோமத்துடன் ராம். போகும் வழியில் தான் படித்த பள்ளியில் வாழ்ந்த முன் கால நிஜத்தை தேடுகிறான்...

அடேய் மனிதா !!

எனக்குள் பல நாட்களாக ஓர் விவாதம். "உணர்வு ஓர் மனிதனுக்கு வரமா சாபமா?" என்று. எத்தனையோ கொள்கைகள் நம் இனத்தை எத்தனையோ சம நிலைக்கு எடுத்து சென்றமையை மறுக்க எண்ணமில்லை. ஆனாலும் வெவ்வேறு உணர்ச்சிககளின் முரண்கள் எவ்வித சம நிலைக்கு வித்தாகும் என ஒரு வியப்பு. கடல் தாண்டி மலை தாண்டி பறந்து விரிந்திருக்கும் நாம் எலாம் எந்த ஒரு உணர்வுக்குள் அடங்குவோம் என பல எண்ணங்களின் வெடித்தல் இதோ ... முதலில் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உன்னதமான உண்மை -உணர்வையும் மனிதனையும் நீக்க முடியாது. கொள்கை அற்ற மனிதன் பிணத்திற்கு சமம். உணர்ச்சிகள் இல்லா ஜடமாய் திரிவான். சான்றிற்கு கம்யூனிசம் தான் இயல்பாக உன் மனதில் உதித்த உணர்ச்சி என்றால் அதை விரும்பு. அந்த சிந்தையுடன் முழுமையாக நட்புறவு கொள். உன் உணர்ச்சிகளே உன் அடையாளம். அவை தான் நீ. அதை பெருமையாக நினைக்காவிட்டால் வேறொரு உணர்ச்சி கொள். ஆனால் அடுத்த அலை வந்தால் அடித்து கொண்டு போகாமல் நங்கூரம் போடு. சுபாஷ் சந்திரா போஸ்ஸின் போர் வழியை குறை கூறி பல காந்தியவாதிகள் கொடி பிடித்தனர். அவர் அன்று மனம் மாறி இருந்தால் அவர் மற்றொரு காந்தியவாதி என்ற நிழலில்...

"அயி கிரி நந்தினி !"

            (அழகாக சிண்டு போட்டுக்கிட்டு நெத்தில சாந்து  பொட்டோடு ,நந்தினி தனது ஐந்தாம் வயதில் !)                                                                  "அம்மா ! எதுக்கு மா ரெண்டு பேரு இருக்காங்க ? "  "என்ன ரெண்டு பேரு ?" "இல்லமா boy உம் இருக்காங்க girl உம் இருக்காங்க ல ?ஏன் ?" " சாமி  ரெண்டு பேரும் ஒத்து வாழ தான் செல்லம் create பன்னிருக்காரு ." "ரெண்டு பெரும் ஒன்னு டா .நீயும் உன் தம்பி உம்  ஒன்னு " "சரி மா" (ஐந்தாம் வகுப்பில் நந்தினி .அதே பாவாடை சட்டை .அதே இரட்டை பின்னல் .ஐந்தடி வளந்துவிட்டாள். சற்று பருமன் )                                                        "பெண்ணாக பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்...

That smile

படம்
                                          "Oh!! The humans .How tragic? How such toxic beings of the world rule it? Never have I seen someone so self-centered .How divergent ? How dynamic ? One day they kiss me right into my cheeks .The other day I get squeezed in the event of their stress .How fiendish? Waging wars against their own fellow mates.Faking smiles and tears through thick and thin. never have I seen a more wicked race. Through summers and winters and autumns and centuries they've gotten worse. Through religions and gods and demons and saints , they haven't found the ultimate truth yet.Oh ! Pity them. Idolizing anything with eyes ,nose and form .I've got eyes , a curve and a form .Idolize me ,you forsaken human race .Let my smile behold the pique of the human race you have ever worshiped. Idolize . Surrender .Dissolve in the idea of me ,or I'll take the life of the first ...

பிரபாகரனும் ஆல்தியாவும்

படம்
                                                              காலை கல்லூரிக்கு 40 கி.மீ பேருந்து பயணம் ஒரு இனிய பாகற்காய் அனுபவம் .சிந்தையை இது வரை எட்டாத எண்ணங்களின் பிறப்பிடம் அது .தேர்விற்கு படித்து கொண்டே காதணியை காதில் மாட்டினேன் .மூன்றாம் பாடலாக ராமின் கற்றது தமிழிலிருந்து "பறவையே எங்கு இருக்கிறாய் " என்ற கானம் .இசைஞானியின் குரலில் முத்துக்குமாரின் வரிகளில் மனதை உலுக்கி எடுக்கும் வகை . அங்கிருந்து முத்துகுமாரிற்கும் ராமிற்கும் எண்ணங்கள் எங்கோ கொண்டு சென்று இதை எழுத காரணி ஆனது .நீண்ட நாட்களாக இந்த படத்தை பார்க்க ஆர்வம் .ராமின் இப்பொது வந்த தரமணியின் தாக்கமே இரண்டு மூன்று நாட்கள் நீண்டது . இப்பொது இருக்கும் ஓரிரு பிடித்தமான இயக்குனர்களில் ஒருவர் .கற்றது தமிழை பார்க்காவிடிலும் அதன் கதையும் பிரபாகரன் (தமிழ் ஈழதிற்கும் தமிழ் பெருமைக்கும் போராடிய வீரரின் பெயர் .இப்படத்திலும் அப்படியே )என்ற அந்த பாத்திரத்தின் அடிநாதியும் நன்கு தெரியும...

MAYBE

Maybe, maybe all the things that you controlled successfully is undone by the one that you can never control. Maybe the death is the boss of all the uncontrollable in this world. Maybe we all despise and fear death to find morality in that. Maybe it's wrong. Either way you are all destined to be here to read about a girl who has no more than a month's stay here. (*Cancer cells are like strange little devils, no?*) It seems I have more cells in my stomach than most of you. Finally some win found my way in that aspect. "In a year I would complete my pilot training and would become the first woman pilot to have emerged from my town" is the every night's default dream. After a similar dream, one fine morning , I woke up to a severe stomach ache only to find that I have warm welcomed enough oncogenic cells inside my little tummy somehow. Well enough numbers to sabotage any chances of survival. Does anyone know how it feels to dream of something? Have you ever fo...