பிரபாகரனும் ஆல்தியாவும்
காலை கல்லூரிக்கு 40 கி.மீ பேருந்து பயணம் ஒரு இனிய பாகற்காய் அனுபவம் .சிந்தையை இது வரை எட்டாத எண்ணங்களின் பிறப்பிடம் அது .தேர்விற்கு படித்து கொண்டே காதணியை காதில் மாட்டினேன் .மூன்றாம் பாடலாக ராமின் கற்றது தமிழிலிருந்து "பறவையே எங்கு இருக்கிறாய் " என்ற கானம் .இசைஞானியின் குரலில் முத்துக்குமாரின் வரிகளில் மனதை உலுக்கி எடுக்கும் வகை . அங்கிருந்து முத்துகுமாரிற்கும் ராமிற்கும் எண்ணங்கள் எங்கோ கொண்டு சென்று இதை எழுத காரணி ஆனது .நீண்ட நாட்களாக இந்த படத்தை பார்க்க ஆர்வம் .ராமின் இப்பொது வந்த தரமணியின் தாக்கமே இரண்டு மூன்று நாட்கள் நீண்டது . இப்பொது இருக்கும் ஓரிரு பிடித்தமான இயக்குனர்களில் ஒருவர் .கற்றது தமிழை பார்க்காவிடிலும் அதன் கதையும் பிரபாகரன் (தமிழ் ஈழதிற்கும் தமிழ் பெருமைக்கும் போராடிய வீரரின் பெயர் .இப்படத்திலும் அப்படியே )என்ற அந்த பாத்திரத்தின் அடிநாதியும் நன்கு தெரியும் .இங்கும் அங்கும் ஓரிரு காட்சிகள் பார்த்திருக்கிறேன் .அதுவே இது எழுத போதுமானதாக கருதி...
தமிழ் நாட்டில் நூறில் எண்பது பொறியாளர், பத்து மருத்துவர் மத்தியில் ஒன்றிரண்டு தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் விதியே பிரபகரன் .மேனாட்டு உடைகளையும் ,ஆங்கில மோகத்தையும் ஏற்று கொள்ள இயலாத மிச்ச சொச்ச ஜனத்தின் மொத்த பிரதிபலிப்பை அப்படத்தில் பார்த்தோம் . மீதமுள்ள 90 சதவீத இனம் பிறந்த நொடியிலிருந்து எங்கோ வசிப்பவரின் வளர்ச்சிக்கு வித்தாக அமையும் அவல இயல்பிற்கு ஓங்கிய குரல் கொடுத்து ,பிறகு பயனில்லாமல் இறந்த ஆன்மாவே பிரபாகரன் (விடுதலை புலிகளின் படுகொலை ஏன் மறுபடியும் ஞாபகம் வருகிறது?) . இந்த சோக நிலையை உலுக்கி எடுத்து காட்டிய திரையே அப்படம் . பிரபாகரன் ஒரு பக்கம் இருக்கட்டும் .மடையன் அவன் .
பத்து வருடங்களுக்கு பிறகு ராமின் கோபங்கள் எல்லாம் அதே போல தான் இருக்கு போலும் . சமுதாயத்தின் சம நிலைக்கான ஏக்கம் எலாம் இன்னும் உயிர்ப்பித்து இருப்பது மகிழ்ச்சி .ஆனாலும் எதோ ஒரு மாற்றம் .ஏமாற்றங்களுக்கெல்லாம் நடுவில் ராமின் இன்றைய தின சமுதாயத்தின் மேல் இருந்த ஒரு பார்வையில் ஒரு மாற்றம் இருந்தது .தரமணி என்னும் தென் சென்னை பகுதியில் இரு துருவங்கள் .அது ஒரு மெல்லிசான கோடு .இப்பக்கம் ரயில் நிலையத்தை தங்குமிடமாக நம்பி உள்ள ,கிழிந்த மேலாடை அணிந்த இயல்பு கூட்டம் . அந்த பக்கத்தில் அடுக்குமாடி குளிர்பான cubicle களில் இரவு பகல் என மேல்நாட்டின் வேலைக்கார கூட்டம் .கதை அழகாய் அந்த மெலிசான கோட்டின் மேல் ஒரு தொலைநோக்கியின் பிம்பமாய் ,ராமின் அடிக்கடி தோற்றத்துடனும் நகர்கிறது . பிரபுநாத் என்ற கோட்டின் இந்த பக்க பிரதிநிதிக்கும் ஆல்தியா என்ற இன்றைய நகர மங்கைக்குமான காதலே களம் .இதில் ராமென்ற படைப்பாளியின் பிரதிபலிப்பை ஆல்தியா என்ற ஆங்கிலோ இந்திய பெண்ணின் மூலம் அழகாய் ,வாழைப்பழத்தில் ஊசி போல இருந்த தருணங்களை ரசித்தேன் .இந்த பெண் நமக்கு எல்லாம் பரிச்சயமானவள் .இவள் புத்திசாலி .சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களில் கோபத்தை நீக்கி எப்படி பார்வையாளராக இருந்து செல்லலாம் என்று உணர்ந்து செயல் படுபவள். உன்னில் என்னில் நம்மில் அச்சு போட்டு இருக்கும் இவள் தான் இன்றைய சமுதாயத்தின் பெரும்பான்மை . தன் கணவன் இன்னொரு ஆண்மகனுக்குகாகத் தன்னை விட்டு சென்றதையும் அவனின் உணர்ச்சிக்காக மானம் இழந்ததையும் 15 ரூபாய் தம்மில் ஊதி தள்ளும் இன்றைய open minded society யின் அங்கம் அவள் .( பி .கு . - அவசர உணவை போல அவசர உணர்ச்சிகளையும் மோகத்தையும் தணித்து கொண்டு நினைத்ததை செய்து முடிக்கும் இன்றைய சமூகமே so called ஓபன் minded society ) .பத்து வருடத்திற்கு முன் "Touch here if you dare" என்ற மேலாடை பெண்ணின் மேல் காட்டிய ராமின் (பிரபாகரனின்) கோபத்தை எல்லாம் அடித்து துரத்தும் மேற்கத்திய சமுதாயம் இது . எல்லா விதமான மனித உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு , எவ்வழி வாழ்க்கைக்கும் பச்சை கொடி காட்டத் தயாராக உள்ள நாட்கள் இது .ஆனாலும் ராமின் இன்றைய ஆல்தியா ராமின் படைப்பல்லவா ?அலுவலகத்தில் படுக்க அழைக்கும் பாஸ் இடம் இன்றைய சராசரி பெண்ணின் தைரியத்தை அவள் காண்பிக்கிறாள் .எவ்வளவு தான் மேற்கத்திய மோகம் பறந்து விரிந்தாலும் தனக்கு என்ன தேவை என்பதில் தெளிவுள்ள இன்றைய சமூக பெண்களின் உன்னதமான உதாரணம் அவள் .அந்த காலத்து 50 வயதை எட்டிய பர்னபாஸ் என்னும் ரயில் நிலைய ஊழியன் ,தன் மனைவி தவறு செய்தால் அடியின் விளிம்பில் சரி செய்ய துணிவிக்கும் சமுதாயம் இது . உணர்ச்சிக்கும் , மோகத்திற்கும் , கோப படவும் ,தவறு செய்யவும் , Jack Daniels + Lights combination - க்கும் பெண்ணிற்கு ஆணைப் போலவே சம உரிமை உண்டு என காட்ட முயற்சிக்கும் புது இந்தியாவின் பிரதி இது .
பிரபாகரன் மடையன் .அவனது பீறிட்ட கோபம் அவனை போல் கோடி மடங்கு பெரிய சமூகத்தில் எவ்வித பாதிப்பையும் தரப் போவதில்லை என்ற உன்னத உண்மையை உணராத psychopath ."He is a man full of old school thoughts" . உன்போன்று என் போன்று இருக்கும் இச்சமூகத்தின் அரவேற்காட்டு மனிதர்களுக்கு எப்பொழுதாவது வரும் அந்த பிரபாகர உணர்ச்சிகளும் கோபங்களும் 5 நிமிடங்கள் கூட வாழாது .அதற்குள் நம்மால் முடிந்தது எல்லாம் இச்சமூகத்தை திட்டி நான்கைந்து memeகளை முகப்புத்தகத்தில் போடுவது தான் .நம்முள் உள்ள old fashioned பிரபாகரன்களுக்கு எல்லாம் அவ்வளவு தான் வாய்த்தது .ஏனெனில் அதனின் சக்தி அவ்வளவு தான் .10 வருட காலத்தில் ராம் போன்ற படைப்பாளியின் உணர்ச்சியே சுருங்கும் போது ,ஆங்கிலத்திலும் ,குட்ட உடைகளிலும் ,பப்களிலும் இன்பம் காணும் பொழுதுகளின் நடுவில் நம்மில் எப்பொழுதாவது உயிர்த்தெழும் பிரபாகர உணர்ச்சிகளின் சக்தி எம்மாத்திரம் ? இச்சமுதாயத்தின் நன்மை தீமைகளின் தராசு அளவை எல்லாம் மறந்து ,நிகழ்வதை காண்போம் .எப்பவும் போல !!!
-ஷ்ரவன்

கருத்துகள்
கருத்துரையிடுக