"அயி கிரி நந்தினி !"

            (அழகாக சிண்டு போட்டுக்கிட்டு நெத்தில சாந்து  பொட்டோடு ,நந்தினி தனது ஐந்தாம் வயதில் !)
                                           
                     "அம்மா ! எதுக்கு மா ரெண்டு பேரு இருக்காங்க ? "  "என்ன ரெண்டு பேரு ?" "இல்லமா boy உம் இருக்காங்க girl உம் இருக்காங்க ல ?ஏன் ?" " சாமி  ரெண்டு பேரும் ஒத்து வாழ தான் செல்லம் create பன்னிருக்காரு ." "ரெண்டு பெரும் ஒன்னு டா .நீயும் உன் தம்பி உம்  ஒன்னு " "சரி மா"

(ஐந்தாம் வகுப்பில் நந்தினி .அதே பாவாடை சட்டை .அதே இரட்டை பின்னல் .ஐந்தடி வளந்துவிட்டாள். சற்று பருமன் )
                                 
                     "பெண்ணாக பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும் " , என எழுதினாள் தேர்வு தாளில் .அது ஒரு 5 மதிப்பெண் வினா .ஹீரோ பேனாவின் nib இல் இருந்து மை துளிகள் சற்று தெளித்து விட , தாளை நீலமாக்கினாள். .நிலை தடுமாறிய படி வயிற்றை பிடித்து கொண்டு மயங்கினாள் நந்தினி ."ஓ" என ஒரேடியாக அழுகை .அறை நிர்வாகி உதவியோடு அவளை தூக்கினார்கள் .வயிற்றை பிடித்த படி  விடாத அழுகை .ப்ரின்ஸி  வந்தார் ."Mr வெங்கடேஷ் ,Your daughter ... "

                 "பொண்ணு பெரியவள் ஆயிட்டா  சித்தப்பா  " என 356 வது போன் கால் செய்தார் Mrs வெங்கடேஸ் .அவ்ளோ பூரிப்பு .சாஷ்டாங்க பிராமண வீட்டிற்கு ஒரு துளி மாற்றம் இல்லாத குடும்பம் அது .வீடே கலை பெற்றது ."அப்புறம் என்ன பொண்ணுக்கு சீக்கிரமே கால் கட்டு போட வேண்டியது தான் .ஹாஹாஹாஹா " என பாட்டி குலுங்கி கொண்டாள் ."சும்மா இருங்கோ அத்த" என  வெட்க பட்டு கொண்டாள் மருமகள் .ஓரமாக இடது கையில் வயித்தை புடிச்சுக்குட்டு அமைதியா அப்பா போன் ல Subway Surfers ஆடி கொண்டு இருந்தாள் நந்தினி  .அழகாக ,வெகுளியாக ,எதுவும் புரியாமல் இருந்த நந்தினிக்கு இப்போதைய ஒரே கவலை தேர்வை முடிக்கவிலையே என்பது தான் .

               விழா திரட்டி நந்தினியை அலங்கார படுத்தி பொம்மை ஆக்கினார்கள் .எல்லோரும் முகத்தில் சந்தனம் பூச நந்தினி மட்டும் அழுது கொண்டே இருந்தாள். பட்டு புடவையில் தொலைந்து இருந்த அவளை  வந்தவன் போனவன் எல்லாம் கேலி சிரிப்பு சிரித்து விட்டு, அவள் பேரில் நல்லா சாப்பிட்டுவிட்டு சென்றார்கள் .7 வயது தம்பி கையில் இப்பொழுது phone .பீறிட்டு வந்தது அவளுக்கு அழுகை .புடவை ,அலங்காரத்தை எலாம் தூக்கி போட்டு தம்பியுடன் விளையாட முடியாத இயலாமையே அந்த கண்ணீர் . "இனிமே நீ ஜாக்கிரதையா இருக்கணும் டா கண்ணா ....பசங்க கிட்ட பாத்து .." அழுதாள் . எல்லாத்தையும் கேட்டு கேட்டு அழுதாள் .மஞ்சள் நீரில் அவள் அழுகை கலந்து , அர்த்தமில்லாமல் போனது.



(கல்லூரி பருவம் .19 வயது நந்தினி இப்பொழுது CA படித்து கொண்டே வைஷ்ணவா வில் பி காம்)

        நேரம் : மதியம் 2                         
        இடம்  : வைஷ்ணவா கல்லூரி சாலை
   
              ஒல்லியான ஒடம்பு .முட்டை கண்களின் ஓரத்தில் கரு நீல மை அவ்ளோ அழகு சேர்த்தது .ஜீன்ஸ் ,கால்களின் வடிவத்தை அப்படியே வெளிகாட்டியது .கட்டம் போட்ட சட்டை ஒரு வித லுக் அளித்தது. கல்லூரி முடிந்து வீட்டிற்கு நடந்து கொண்டே இருக்கையில் ,பையில் இருந்து  உரிப்பஞ்சு packet விழுந்தது ."ஹே நந்த்ஸ் .இன்னும் ரெண்டு நாள் எதுவும் செய்ய முடியாது போல இருக்கு .சேரி .அப்பறம் வரேன் .பத்திரமா இரு " என அவள் இடுப்பை பிடித்தான் .காலியான சாலை .கேட்க நாதியில்லை .பாக்கெட்டை வாங்கி கொண்டு அழுது கொண்டே வீட்டை அடைந்தாள் ."அம்மா" , என கண்ண தொடச்சுக்குடே அழைத்தாள்.சாமி அறையில் அம்மா ,"அயி கிரி நந்தினி....நந்தித ..." ."நந்தினி! நீ ஆத்துல இலைல .உள்ள வராத .வெளிய இரு " என்றாள் .அவ்ளோ தான் .குடுகுடுவென தன் அறைக்குள் சென்று கதவை மூடிவிட்டு அருவி பொழிந்தாள் .முட்டை கண்களிருந்து அருவி ."பெண்ணாக பிறப்பதற்கு  மாதவம் செய்திடல் வேண்டுமாம் " .எப்பொழுதோ படித்தது ஞாபகம் வந்தது.அழுதாள் .நெறய அழுதாள் .


(நந்தினி CA .22 வயது .மொத்தமாக பான்ட் சட்டைக்கு மாறியாச்சு .நெத்தில பொட்டு எதுவும் இல்லை .அதே சலிக்காத அழகு .பசங்க எல்லாம் அவளது தெத்து பல்லில் இன்னும் வசமாகும் சக்தி .ஆனாலும் மாற்றங்கள் .பற்பல மாற்றங்கள் .)

          நேரம் : 9 30 மணி
           இடம் : அவளது அலுவலகம்

            "நந்தினி ,This is ridiculous .இதெல்லாம் இப்படியா open ஆ வெப்பாங்க ? ஒரு professionalism இல்ல.எல்லார்ட்டையும் சொல்லணுமா ?உனக்கு இப்போ periods  னு .வேணும்னா நா எல்லார்க்கும் மெயில்  பன்னட்டா ? " என்று அவளது பாஸ் பலகையின் மேல் இருந்த tampon ஐ பார்த்து கத்தி கொண்டு இருக்கையில் ,அவள் பெரிதாக எதுவும் பேசாமல் இருக்கையை விட்டு எழுந்தாள் .அவள் பாஸ் ஐ பளீரென்று ஒரு அறை விட்டால் .ஸ்தம்பித்தது அலுவலகம் .

             அடுத்த நாள் termination லெட்டர் வீட்டை வந்து சேர்ந்தது . ஓபன் செய்தாள் .ரெண்டு மூன்று முறை பார்த்து விட்டாச்சு.தாளில் அது தான் தெரிந்தது அவளுக்கு ."பெண்ணாக பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும் " என தாள் நிரம்ப எழுதப்பட்டிருந்தது...இம்முறை சிரித்தாள் .ஓங்கி ஓங்கி சிரித்தாள். வழக்கம் போல் அதே "அயி கிரி நந்தினி நந்தித மேதினி .." என ஒலித்தது பூஜை அறையில் .இம்முறை அவளையே போறறி பாடும் படி..


                                                                                - ஷ்ரவன் :)










கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உரிமை

ரூம் நம்பர் 556