இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

corona days

     இரண்டாம் வருடமாய் தொடர்ந்து மனிதன் என்னும் விலங்கு எத்தனை துச்சமானவன் என உணர்த்தி கொண்டிருக்கிறது, கண் அறியா கிருமி. கொரோனா என அந்த துச்ச விலங்கு அதனை அழைக்கிறது. quarantineஉம் isolationஉம் நம் ஆங்கில சொல்லகராதியில் சேர்த்த மிகச்சிறிய கொடூரன். சீனாவில் எவனோ வவ்வால் கரி உண்டு வந்ததாம். அது உண்மை என்றால் வவ்வால் தான் சம கால கல்கி போல.       போன வருடம் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் கம்மி, சாமானியனின் பயம் மிகவும் அதிகமாக தென்பட்டது. மார்ச் மாதம் துவங்கி இரண்டு மூன்று மாதங்களுக்கு 200 300 கேஸ் என்றாலே அலறி அடித்து வீட்டில் அமர்ந்தோம். சாதி மத பேதமின்றி தாக்கினான் அந்த அசுரன். சிறு தொழிலில் இருந்து அம்பானியம் வரை அனைத்தும் முடங்கியது. அன்றாடம் ஊதியம் வாங்கி பிழைத்த பல கூலி தொழிலார்கள் வியாபாரிகள் என பல தரப்பினர் உணவு இல்லாமல் வாடியதெல்லாம் நாம் அறிவோம். லாக்கடவுன் என நாம் இதற்கு முன் கேள்வியே படாத கட்டுப்பாடு நம் அனைவரையும் வீட்டில் அடைத்தது. என்னை போன்ற வீடு விரும்பிகளுக்கு அது முதலில் பெரிய மாற்றமாக தெரியவில்லை. எப்ப...

கொடுமையே தூது சொல்

கொடுமையே தூது சொல்  கையில் உன் நகத்தின் கூர்மையால் நான்கு கீறல்  முகத்தில் பதிந்த அரக்க கை, மண்ணெண்ணெய்யில் எறிந்த முதுகு  இவை என் ஆபரணங்கள்  மறைக்க முயன்றதில்லை பெருமை சுடர்கள் அவை. யார்யாரோ சாலையில் அவைகளை பார்த்து பரிதவித்தார்கள் முகப்புத்தகத்தில் அழும் பொம்மை போட்டார்கள்  சிரித்தேன்! உள்ளங்குளிர்ந்தது! ஓர் அரக்கன் உடலென்னும் என் "கோவிலில்" நிரந்தரமாக பதிந்தான் இவ்வுடல் கழியும் வரை இவை தூது சொல்லும். வெறும் வார்த்தையை நம்ப யார் இங்கே  மன வடுக்களை காண யார் இங்கே  சீரமைக்க மாட்டேன் இந்த உதிர வடுக்களை  அவையும் அவையால் எழும்பும் கழிச்சொல்லும் கோடி முறை கொல்லட்டும்  உன்னை  அவர் அழும் துளிகளில் கொப்பளித்துப் பொசுங்கு                                                                                ...