இடுகைகள்

அக்டோபர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தனிப்பெருந்துணையே

படம்
ராம் , அவள் அணிந்திருந்த  காய்ந்த துணிகளை மடித்து தனது வாழ்நாள் பொக்கிஷங்களோடு சேர்த்து வைக்க , கறுப்பு திரையில் "இயக்கியவர் - பிரேம் குமார்" என காட்சி அளிக்கும் போது உணர்கிறது , நாம் பார்த்து கொண்டிருப்பது படம் என்று மனதில் மிகுந்த கனத்துடன் திரை அரங்கை விட்டு வெளியே வந்த பல பேரில் ஒருவராய் நான். ராம் , ஜானு என்ற எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரின் வாழ்வில் ஒரு நாள் பங்கெடுத்து கொண்டதை போல் ஒரு உணர்வு  .எதோ இரண்டு பேர் அவர்களது வாழ்வில் நடந்த கதையை நம்மிடம் மனம் திறந்து கூறிய ஒரு நிறைவு. அவர்கள் சிரிப்பில் நாம் சிரிக்க ,அவர்கள் பிரிவில் நாம் வாடா ,உணர்ச்சிகளின் எழும்பல் பரவசம் ஊட்டி ஏதோ செய்தது. என்னை என்னடா செய்தீர்கள்? ஒரு திரைப்படத்தை பார்த்து எனக்குள் ஏன் இவ்வளவு பாதிப்பு என புலம்ப வைத்தது 96. பார்த்து விட்டு வந்த உடன் காய்ந்த மண்ணை யாசித்த மழையைப் போல் உணர்ச்சிகளின் தூறல் இதோ வழி போக்கிக் கொண்டு நிஜங்களின் நிழலை கேமராவில் பிடித்து கொண்டு , இரண்டு மாதம் வெட்டாத ரோமத்துடன் ராம். போகும் வழியில் தான் படித்த பள்ளியில் வாழ்ந்த முன் கால நிஜத்தை தேடுகிறான்...