இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அடேய் மனிதா !!

எனக்குள் பல நாட்களாக ஓர் விவாதம். "உணர்வு ஓர் மனிதனுக்கு வரமா சாபமா?" என்று. எத்தனையோ கொள்கைகள் நம் இனத்தை எத்தனையோ சம நிலைக்கு எடுத்து சென்றமையை மறுக்க எண்ணமில்லை. ஆனாலும் வெவ்வேறு உணர்ச்சிககளின் முரண்கள் எவ்வித சம நிலைக்கு வித்தாகும் என ஒரு வியப்பு. கடல் தாண்டி மலை தாண்டி பறந்து விரிந்திருக்கும் நாம் எலாம் எந்த ஒரு உணர்வுக்குள் அடங்குவோம் என பல எண்ணங்களின் வெடித்தல் இதோ ... முதலில் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உன்னதமான உண்மை -உணர்வையும் மனிதனையும் நீக்க முடியாது. கொள்கை அற்ற மனிதன் பிணத்திற்கு சமம். உணர்ச்சிகள் இல்லா ஜடமாய் திரிவான். சான்றிற்கு கம்யூனிசம் தான் இயல்பாக உன் மனதில் உதித்த உணர்ச்சி என்றால் அதை விரும்பு. அந்த சிந்தையுடன் முழுமையாக நட்புறவு கொள். உன் உணர்ச்சிகளே உன் அடையாளம். அவை தான் நீ. அதை பெருமையாக நினைக்காவிட்டால் வேறொரு உணர்ச்சி கொள். ஆனால் அடுத்த அலை வந்தால் அடித்து கொண்டு போகாமல் நங்கூரம் போடு. சுபாஷ் சந்திரா போஸ்ஸின் போர் வழியை குறை கூறி பல காந்தியவாதிகள் கொடி பிடித்தனர். அவர் அன்று மனம் மாறி இருந்தால் அவர் மற்றொரு காந்தியவாதி என்ற நிழலில்...