இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொடுமையே தூது சொல்

கொடுமையே தூது சொல்  கையில் உன் நகத்தின் கூர்மையால் நான்கு கீறல்  முகத்தில் பதிந்த அரக்க கை, மண்ணெண்ணெய்யில் எறிந்த முதுகு  இவை என் ஆபரணங்கள்  மறைக்க முயன்றதில்லை பெருமை சுடர்கள் அவை. யார்யாரோ சாலையில் அவைகளை பார்த்து பரிதவித்தார்கள் முகப்புத்தகத்தில் அழும் பொம்மை போட்டார்கள்  சிரித்தேன்! உள்ளங்குளிர்ந்தது! ஓர் அரக்கன் உடலென்னும் என் "கோவிலில்" நிரந்தரமாக பதிந்தான் இவ்வுடல் கழியும் வரை இவை தூது சொல்லும். வெறும் வார்த்தையை நம்ப யார் இங்கே  மன வடுக்களை காண யார் இங்கே  சீரமைக்க மாட்டேன் இந்த உதிர வடுக்களை  அவையும் அவையால் எழும்பும் கழிச்சொல்லும் கோடி முறை கொல்லட்டும்  உன்னை  அவர் அழும் துளிகளில் கொப்பளித்துப் பொசுங்கு                                                                                ...